Breaking News

BREAKING NEWS: அடுத்த ஊரடங்கு விரைவில் அறிவிக்கபடும் : பிரதமர் மோடி முழு உரை

அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாட்டுமக்களிடையே உரையாற்றியது என்ன :


இந்த உலகில் ஒரு வைரஸ்  பெரும் நாசத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் இந்த வைரஸால் உலகம் முழுவதும் 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனால் பலரும் தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்துள்ளனர் இந்த வைரஸின் தாக்கத்தால் உலகம் கடந்த நான்கு மாதங்களாக கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது மேலும் கொரோனாவுக்கு எதிராக போராடி நம்மை,நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்





கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் சின்னாபின்னமாக்கியிருப்பது வேதனை அளிக்கின்றது மேலும் கொரோனா என்ற ஒரு வைரஸ் எல்லோரது வாழ்க்கையும் புரட்டிப் போட்டுள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு மனித குலத்திற்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவதற்கான நேரம் இதுவல்ல நாம் இதற்கு முன்பு, இதுபோன்ற பிரச்சினையை கேள்விபட்டதோ, பார்த்ததோ இல்லை

உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது மேலும் மனிதர்களுக்கு பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது  தனிநபர் தன்னம்பிக்கையே இந்த போரில் வெல்வதற்கு நமக்கு இருக்கக்கூடிய ஒரே வழி யாரையும் சாராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும் தற்போதைய நெருக்கடி இந்தியாவிற்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது  இந்த இக்கட்டான சூழலில் இந்தியமக்கள் அவசரபடக்கூடாது

எனவே நான்காவது  கட்ட பொதுமுடக்கம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்   இதன் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பிரதமர் அறிவிப்பு

நாம் எப்படி கொரோனா சங்கிலி தொடரை தடுத்துள்ளோமோ அதே போல் இனியும் தடுப்போம் கொரோனா மனிதர்களுக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது தற்போது கூடுதல் உறுதியுடன் கொரோனாவை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும்  மேலும்  நாம் உயிர்களை காப்பாற்ற வேண்டும்  அதே நேரத்தில் முன்னேறியும் செல்ல வேண்டும் உலகநாடுகளைவிட இந்தியா மிக மிக நன்றாக கொரோனா தடுப்பில் செயல்படுகின்றது உலகின் கொள்கைகளையே இந்தியா மாற்றி அமைத்து வருகிறது 


ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்ட விவரங்களை நிதியமைச்சர் விரைவில் அறிவிப்பார் உலகமே வாழ்வா? சாவா என போராடிக் கொண்டிருந்த போது இந்தியாவின் மருந்துகளே நம்பிக்கை தந்தன இந்தியாவின் நடவடிக்கைகளை ஒட்டுமொத்த உலகமே போற்றுகிறது இந்தியர்கள் ஒவ்வொருவருமே பெருமிதம்  கொள்ள வேண்டிய தருணம்

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் அன்பிற்குரியவர்கள் சிலரை பறிகொடுத்துள்ளோம்  இந்திய மருந்துகள் உலகத்திற்கே நம்பிக்கை அளிக்கின்றன மேலும் இந்த நெருக்கடியை நமக்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், தன்னம்பிக்கை கொண்ட தேசமாக இந்தியா உருவெடுத்துள்ளது 









Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback