Breaking News

அட்மின் மீடியா வாசகர்களுக்கு அட்மின் மீடியா-வின் நோன்பு பெருநாள் வாழ்த்து

அட்மின் மீடியா
2

அஸ்ஸலாமு அலைக்கும்..

ஈகைத் திருநாளை கொண்டாடும்  உலகில் வாழும் அட்மின் மீடியா வாசகர்கள் அனைவருக்கும் உளங்கனிந்த அட்மின் மீடியா-வின் நோன்பு பெருநாள் வாழ்த்து 

தக்கப்பல்லல்லாஹூ மின்னா வ மின்கும் 



இஸ்லாம் என்பது ஒரு மதம் என்பதையும் தாண்டி அது ஒரு வாழ்க்கை நெறி என்றே கூறமுடியும்


அண்ணல் நபிகள் நாயகம் வழங்கிய போதனைப்படி  வருடம் முழுவதும்  இறை அச்சத்துடனும், கட்டுப்பாட்டுடனும்  வாழ்வதற்கு மகத்தான பயிற்சியை தரும்  மாதமே இந்த ரமழான் நோன்பு மாதமாகும்

ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான நோன்பினை ஒரு மாத காலம் நோற்று ஏழைகளின் பசிப்பிணியின் தன்மை பற்றி அனுபவபூர்வமாக அறிந்து கொள்வதுடன் இறையச்சத்துடன் விட்டுக்கொடுத்தல் குடும்ப உறவை பெறுதல் பொறுமையை கடைப்பிடித்தல் சகோதரனுக்கு உதவுதல் போன்ற பண்புகளை வள்ர்த்தல்  அதற்கான வாய்ப்பினை இந்த நோன்பு நமக்கு வழங்கியது.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுவதன் மூலம் சமூக ஒற்றுமையையும் அமைதியையும் நிலைநாட்ட முடியும் என்பதற்கு ஏற்ப எளியோருக்கு ஈந்து நோன்பின் கடமைகளை நிறைவேற்றி மகிழ்கின்ற இத்தருணம் அனைத்து முஸ்லிம்களும் மகிழ்கின்ற ஒரு நாளாகும்...

இறை உணர்வுடன் தீமைகளிலிருந்து விலகி நன்மைகளை அதிகம் செய்ய இறைவன் நம் எல்லோருக்கும் அருள் புரியட்டும்..

ஈகைத் திருநாளை கொண்டாடும் அட்மின் மீடியா வாசகர்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.

                              இப்படிக்கு அட்மின் மீடியா நிர்வாக குழுவினர்




Tags: மார்க்க செய்தி முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

2 Comments

  1. உங்களுக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

    ReplyDelete
  2. *"தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்"*

    *‏تقبل الله منا ومنكم*

    *Taqabbal Allahu Minna Wa Minkum*

    உனக்கும், நம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியுடன், சமாதானமும், செழிப்பும் நிறைந்த "ஈத்" தாக அமைய வாழ்த்துக்கள்.

    புனித மாதத்தின்போது செய்த பிரார்த்தனைகள் மற்றும் முயற்சிகள் அனைத்தையும் இறைவன் ஏற்றுக் கொள்ளட்டும்.

    நம் அனைவரின் பாவங்களை மன்னித்து, உலகம் முழுவதும் உள்ள மக்களின் துன்பங்களை போக்கி இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மை செய்த நன்மக்களாக இறைவன் அங்கீகரீக்கட்டும்
    ஆமீன் ..!ஆமீன்

    ReplyDelete