Breaking News

வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் பயன வழிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

அட்மின் மீடியா
0
கொரானா வைரஸ் பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு உள்லதால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீடக இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதுஅவர்களை 7 ம் தேதி முதல் விமானங்கள் மூலம் அழைத்து வர உள்ளார்கள்




அதன் படி இந்தியாவிற்கு பயணிக்கும் அனைவரும் தங்களின் சொந்த விருப்பப்படி  பயணிக்கிறோம் என்றும்  இந்தியாவுக்கு வந்தவுடன் கட்டாயமாக 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்வேன் என்று எழுத்துப்பூர்வமாக எழுதி தர  வேண்டும்.

மேலும் விமான டிக்கெட்  செலவையும் அவர்களே ஏற்க வேண்டும். 


இந்திய விமான நிலையங்களில் பயணிகள் அனைவருக்கும் வெப்ப தெர்மல் பரிசோதனை செய்யப்படும் கொரோனா அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே விமானத்திலோ அனுமதிக்கப்படுவார்கள்.


விமானங்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

14 நாட்களுக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் கொரோனா இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் தங்களின் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 

அனைத்து பயணிகளும் தங்கள் மொபைல் போனில் ஆரோக்யா சேது ஆப் உபயோகிக்க வேண்டும்

மேலும் படிக்க: வெளிநாட்டில் உள்ள இந்தியர்களுக்கான மே 7 முதல் 13 வரையிலான விமான பயண திட்டம் வெளியீடு..!! முழு விபரம்

ஒவ்வொரு பயணிகளுக்கும் புறப்படும் நேரத்தில் 2 எண்ணிக்கையிலான மூன்று அடுக்கு முக கவசங்கள் அடங்கிய பாதுகாப்பு கிட் கொடுக்கப்படும். 2 ஜோடி கையுறைகள் (gloves) மற்றும் சிறிய பாட்டில்களில் கை சுத்திகரிக்கும் சானிடைசர்கள் (hand sanitisers) வழங்கப்படும்



Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback