Breaking News

வெளிநாட்டில் உள்ள இந்தியர்களுக்கான மே 7 முதல் 13 வரையிலான விமான பயண திட்டம் வெளியீடு..!! முழு விபரம்

அட்மின் மீடியா
0
வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கையின் முதல் வாரத்திற்கான விரிவான விமான பயண திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.





முதல் நாள் மே மாதம் 7 ம் தேதி இந்தியாவில் இருந்து 10 விமானங்கள் கீழ் கண்ட நாடுகளுக்கு பயனம் செய்து அங்கு இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர உள்ளது  ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ் 




இரண்டாம் நாள் மே மாதம் 8ம் தேதி  9  விமானங்களில் இரண்டு விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்க்கும் மலேசியா, அமெரிக்கா, பங்களாதேஷ்,குவைத், சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர உள்ளது




மூன்றாம் நாள் வரும் 9 ம் தேதி  இந்தியாவில் இருந்து செல்லும் 9 விமானங்களில் குவைத், ஓமன், சவுதி அரேபியா, மலேசியா அமெரிக்கா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், லண்டன், அமீரகம் என செல்கின்றது






நான்காம் நாள் வரும் 10 ம் தேதி இந்தியாவிலிருந்து செல்லும் 8 விமானங்களில் கத்தார் , மலேசியா, குவைத், சிங்கப்பூர், லண்டன், பங்களாதேஷ், அமீரகம்,மற்றும் அமெரிக்கா வில் இருந்து இந்தியர்களை மீட்கும்





ஐந்தாம் நாள் 11ம் தேதி  இந்தியாவிலிருந்து 9 விமானங்கள் புறப்படும். அதில் சவுதிஅரேபியா, பஹ்ரைன், மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், லண்டன் , அமீரகம், பங்களாதேஷ், மற்ரும் அமெரிக்கா செல்லும் ஒரு விமானம் அங்குள்ள பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடையும்.





ஆறாம் நாளான 12 ம் தேதி 11 விமானங்கள் இந்தியாவில் இருந்து செல்கின்றது அதில் மலேசியா, ஓமன், லண்டன், சவுதி அரேபியா குவைத, அமீரகம், பிலிப்பைன்ஸ்,  பங்களாதேஷ், சிங்கப்பூர், அமெரிக்கா, ஆகிய நாடுகளுக்கு சென்று  அங்குள்ள இந்தியர்களை அழைத்து கொண்டு வரும்.




ஏழாம் நாள் 13  ம் தேதி, 8 விமானங்கள் இந்தியாவில் இருந்து புறப்படும். குவைத், பிலிப்பைன்ஸ், பங்களாதேஷ், லண்டன், அமெரிக்கா, சவுதி அரேபியா, மலேசிய, அமீரகம் சென்று அங்குள்ளவர்களை அழைத்து கொண்டு வர உள்ளது 




முதல் வாரத்தில் தமிழகத்திற்கு  அழைத்து வர உள்ள விமானங்களின் விவரம் 


2 ம் நாள்  ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து   விமானம் சென்னை வந்தடையும்


3ம் நாள் மலேசியாவில் இருந்து விமானம்  திருச்சி வந்தடையும் 

3ம் நாள் அமெரிக்காவில் இருந்து  விமானம் சென்னை வந்தடையும்


4 ம் நாள் குவைத்தில் இருந்து  விமானம்  சென்னை  வந்தடையும்

4 ம் நாள் சிங்கப்பூரில் இருந்து விமானம் திருச்சி  வந்தடையும்


5 ம்நாள் மலேசியாவில் இருந்து சென்னை வந்தடையும்


6 ம் நாள் ஓமான் நாட்டில் இருந்து விமானம் சென்னை வந்தடையும்

6ம் நாள் இங்கிலாந்து நாட்டில் இருந்து விமானம் சென்னை வந்தடையும்


7 ம்நாள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து விமானம் சென்னை வந்தடையும்

7 ம் நாள் பங்களாதேஷில் இருந்து விமானம் சென்னை  வந்தடையும்



Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback