Breaking News

கூகுள் மேப் மீது போலீஸில் ஒருவர் புகார் : காரணம் என்ன ? தீர்வு என்ன?

அட்மின் மீடியா
0
இன்றைய காலத்தில் கூகுள் மேப்பின் உதவி அனைவருக்கும் தேவைப்படுகிறது. நாம் எங்காவது புதிய இடத்திற்கு செல்ல இந்த கூகுள் மேப் நமக்கு  பயன்படுகிறது.


அந்த கூகுள் மேப் மீது மயிலாடுதுறை லால் பகதூர் நகரைச் சேர்ந்தவர்  சந்திரசேகரன் புகார் அளித்துள்ளார் என்னவென்றால்

இவர் தினமும் வேலைக்குச் சென்று வீட்டுக்குத் திரும்பியதும் அவரது ஸ்மார்ட் போனை வாங்கி அதில் கூகுள் மேப்பில் யுவர் டைம் லைன் பார்பது அவரது மனைவியின்  வழக்கம் 

(அந்த டைம் லைனில் நாம் எங்கு சென்று வந்தோம் எதில் சென்று வந்தோம் என்ற விவரம் பதிவாகி இருக்கும்)


இங்கு தான் பிரச்சனை சந்திரசேகர் அவர்கள்  செல்லாத பகுதிகளுக்குச் சென்று வந்ததாக  கூகுள் மேப் காட்டுவதால் இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்பத்தில் சண்டை வருகின்றது

இதனால் கூகுள் மேப் நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியும் நஷ்ட ஈடு கோரியும் சந்திரசேகரன் மயிலாடு காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். 


சரி கூகுள் மேப் நாம் செல்லாத இடத்திற்க்கு சென்றது போல் காட்டுமா? 

இப் பிரச்சனைக்கு தீர்வு என்ன?


பொதுவாக கூகுள் மேப் நாம் சென்று வந்த பகுதிக்கு தான் நம் டைம் லைனில் காட்டும் நாம் செல்லாத பகுதிக்கு சென்றதாக காட்ட வாயுப்பு இல்லை 

ஆனால்  நாம் ஒரே ஈ-மெயில் ஐடியை இரு போன்களுக்கு உபயோகம் செய்தாலோ அல்லது நமது ஈ-மெயிலை வேறு நபர் திருடி (ஹேக் செய்து) பயன்படுத்தினாலோ அவர் எங்கெல்லாம் சென்று வருகிறாரோ அது நாம் சென்றதாக பதிவாகும்... இப்படி நிகழதான் வாய்யு உள்ளது 

எனவே மொபைல் போனில் உள்ள இ மெயில்ஜடியை மாற்றி பார்க்கலாம் என்பது அட்மின் மீடியா கருத்து 





Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்

Give Us Your Feedback