Breaking News

வதந்திகளை நம்பாதீர்கள் நான் நலமுடன் இருக்கின்றேன்: அமித்ஷா விளக்கம்

அட்மின் மீடியா
0
தமது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களுக்கு அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அமித்ஷாவின் உடல்நிலை தொடர்பாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் பரவியது.



இந்நிலையில் இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 


அதில் தாம் நலமுடன் இருப்பதாகவும், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை என்றும் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொற்றை எதிர்த்து நாடு போராடி வரும் நிலையில், உள்துறை அமைச்சர் என்ற முறையில் நான் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறேன். சமூக வலைதளங்களில் பரவும் இது போன்ற தகவல்களை நான் கண்டுக்கொள்வதில்லை.எனது கட்சித்தொண்டர்கள் மற்றும் நலம் விரும்பிகள், எனது நலன் குறித்து கவலைப்பட்டுள்ளனர். அதனை நான் ஒதுக்கிவிட முடியாது. அதனால், இந்த விளக்கத்தை நான் அளிக்கிறேன். நான் முழு உடல்நலத்துடன் உள்ளேன்.


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback