Breaking News

அமெரிக்காவிலும் , கனடாவிலும் பவுடர் விற்பனையை நிறுத்திய ஜான்சன் & ஜான்சன்

அட்மின் மீடியா
0
ஜான்சன் அண்ட் ஜான்சன் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் குழந்தைகளுக்கான பவுடர் விற்பனையை நிறுத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.



இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளால் புற்றுநோய் உண்டானதன் காரணமாக பலநூறு கோடி டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை என்று அந்த நிறுவனம் இதுவரை தொடர்ந்து கூறி வந்தது.அந்த நிறுவனத்தின் டால்க் தயாரிப்புகள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை என்று அமெரிக்காவில் மட்டும் சுமார் 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன்-க்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது


Tags: இந்திய செய்திகள் முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback