Breaking News

தமிழகத்திற்குள் எங்கெல்லாம் செல்ல இ- பாஸ் வேண்டும்? எங்கு செல்ல இ-பாஸ் வேண்டாம்: முழு விவரம்!!

அட்மின் மீடியா
0

மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ பாஸ் தேவையில்லை பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ பாஸ் அவசியமில்லை.



மண்டலம் 1 : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்


மண்டலம் 2 : தருமபுரி, வேலுhர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி


மண்டலம் 3: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி 


மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை


மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்


மண்டலம் 6: தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி


மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு


மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிமண்டலம் 7-ல் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுமாவட்டங்கள் மற்றும் 


அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ பாஸ் தேவையில்லை.


வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரவும் மண்டலங்களுக்கிடையே சென்று வரவும் இ பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.


அதாவது ஒருவர் 1 வது மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் ஒருவர் எங்குவேண்டுமானாலும் எந்த வாகனத்திலும் செல்லலாம் அதற்க்கு இ பாஸ் வேண்டாம்


ஆனால் ஒருவர் 1 வது மண்டலம் தவிர்த்து வேறு மண்டலம் செல்ல கண்டிப்பாக இ பாஸ் வாங்க வேண்டும் 


இ பாஸ் விண்ணப்பிக்க:  https://tnepass.tnega.org/#/user/pass

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback