இந்தியாவிற்கு அமீரகம் வழங்கிய 7 டன் அளவிலான கொரோனா மருத்துவ உதவி
அட்மின் மீடியா
0
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்ததில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் பல நாடுகளுக்கு தனது நாட்டிலிருந்து மருத்துவப் பொருட்களை அனுப்பி தொடர்ந்து உதவியளித்து வருகிறது.
அந்த வகையில் இரு நாட்டு உறவை மேம்படுத்தவும் இந்திய நாட்டுமக்களுக்கு உதவி செய்யும் விதமாக, ஐக்கிய அரபு அமீரகம் ஏழு மெட்ரிக் டன் மருத்துவப் பொருட்கள் கொண்ட விமானத்தை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது
கொரோனாவை எதிர்த்துப் போராடும் சுமார் 7,000 மருத்துவ நிபுணர்களுக்கு இந்த மருத்துவப்பொருட்கள் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
A #UAE aid plane containing 7 metric tons of medical supplies reached India to support its efforts to combat the spread of COVID-19, which will contribute to strengthening the health care field and reduce the spread of the corona. pic.twitter.com/Xr3DQm4JDO— UAE Embassy-Newdelhi (@UAEembassyIndia) May 2, 2020
Tags: வெளிநாட்டு செய்திகள்