Breaking News

FACT CHECK: வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த நியூசிலாந்தில் இருந்து 5 லட்சம் காகம் வாங்க மத்திய அரசு முடிவா? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த நியூசிலாந்தில் இருந்து 5 லட்சம் காகம் வாங்க மத்திய அரசு முடிவு 5000 கோடி நிதி ஒதுக்கீடு.என்று  ஒரு பிரேக்கிங் நியூஸ் புகைபடத்தை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவின் குஜராத் பகுதிக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்தன.


அதே போல் தற்போது அதனை விட அதிமான வெட்டுகிளிகள் வட மாநிலங்களில் பரவி பயிர்களை நாசம் செய்கின்றது அதன் வீடியோக்களையும் நாம் நம் தளத்தில் பதிவிட்டிருந்தோம் வீடியோ பார்க்க

அதே போல் அந்த வெட்டுகிளிகளின் படையெடுப்பு தமிழத்தில் வராது என வேளான் துறை அறிவிப்பும் வெளியிட்டு இருந்தது. அதனையும் நாம் நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம் செய்தி படிக்க

ஆனால் மேலே உள்ள புகைபட பிரேக்கிங் நியூஸ் செய்தி யாரோ எடிட் செய்து உள்ளார்கள்

அதில் எந்த செய்தி நிறுவன பெயரும் இல்லை


மேலும் அதிகாரபூர்வ செய்திகளிலும் அது போல் ஒரு செய்தி எங்கும் நாம் தேடிய வரையில் இல்லை

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback