Breaking News

வெட்டுக்கிளிகள் படையால் தமிழகத்திற்கு ஆபத்தில்லை! - தமிழக வேளாண் துறை

அட்மின் மீடியா
1
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படை விவசாய நிலங்களை சூரையாடி வரும் நிலையில்இந்த வெட்டுகிளிகள் படை தமிழகத்திற்கும் வந்து விடுமோ என்ற பயம் தமிழக விவசாயிகளிடமும் நிலவி வருகிறது.



இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக வேளாண் துறை வெட்டுக்கிளி படைகளால் தமிழகத்திற்கு ஆபத்து இல்லை என்றும், எனினும் பாதுகாப்பு முன்னெச்ச்சரிக்கையாக செயல்பட வேண்டியது உள்ளதாகவும் கூறியுள்ளது.
 
இந்தியாவின் மேற்குப் பகுதியில் வெட்டுக் கிளிகள் பெருமளவில் பயிர்களை நாசம் செய்துவரும் நிலையில், அந்த அச்சுறுத்தல் தமிழ்நாட்டிற்கு இல்லையென தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

வெட்டுக்கிளி படையெடுப்பின் தாக்கம் பெரும்பாலும் இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில்தான் இதுவரை இருந்துவந்துள்ளது.

குறிப்பாக ராஜஸ்தான் மாநிலம் இதனால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று.

2019ஆம் ஆண்டு மே மாதம் ராஜஸ்தானில் துவங்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு இந்த ஆண்டு பிப்ரவரிவரை தொடர்ந்தது.

ெட்டுக்கிளி படையெடுப்பைப் பொறுத்தவரை அவை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்துடன் நின்றுவிடுவதே வழக்கமென்றும் தக்காணப் பீடபூமியைத் தாண்டி தமிழகம்வரை வந்ததில்லையென்றும் தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இருந்தபோதும் இதன் நகர்வு குறித்து மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணித்துவருவதாகவும் ஒருவேளை தாக்குதல் நடைபெற்றால் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் என்ன என்பதையும் வேளாண் துறை வெளியிட்டுள்ளது.

வெட்டுக்கிளிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த வேண்டுமென்றும் மாலத்தியான் மருந்தை மிகப் பெரிய தெளிப்பான்கள், தீயணைப்பு வாகனங்களின் மூலம் தெளிக்க வேண்டுமென்றும் வேளாண் துறை கூறியிருக்கிறது.

அல்லது அரசின் அனுமதியைப் பெற்று ஒட்டுமொத்தமாக வான்வெளியிலிருந்து மருந்தைத் தெளிக்கலாம் என்றும் வேளாண் துறை தெரிவித்துள்ளது.


Tags: இந்திய செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. அப்போது ஏன் தற்போது பாதிப்படைந்துள்ள மாநிலங்களில் இந்த முறைகளை செயட்படுத்தவில்லை.

    ReplyDelete