Breaking News

ஏப்ரல் 5ஆம் தேதி இரவு 9 நிமிடங்களுக்கு விளக்குகளை ஏற்றுங்கள்; பாரத பிரதமர் மோடி அவர்களின் வேண்டுகோள்

அட்மின் மீடியா
4
பாரத பிரதமர் மோடி அவர்களின் இன்றைய வேண்டுகோள்




கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து மூன்றாவது முறையாக பிரதமர் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்துவதற்கு நன்றி தெரிவித்தார். 130 கோடி மக்கள் வீட்டில் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் என்று தெரிவித்த மோடி, வீட்டில் இருந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் தான் கொரோனாவை விரட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க நாம் அனைவரும் இணைந்து கடைபிடித்து வரும் ஊரடங்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என கூறிய மோடி அவர்கள் மேலும் 

வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம் எனவே ஏப்ரல் 5ஆம் தேதி ஞாயிற்றுகிழமை  இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்கை அணையுங்கள் , வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு முறையாக சமூக விலகலை கடைபிடித்து டார்ச் & அகல் விளக்குகளை வீட்டின் நான்கு மூலையிலும் , பால்கனியில் காட்டுங்கள் கொரானாவிற்க்கு எதிரான மகா சக்தியாக மாறுவோம்... என கொரோனா விழிப்புணர்வு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வீடியோ மூலம் பேச்சு

முழு வீடியோ பார்க்க




Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback

4 Comments

  1. நோயை தடுக்க இதுவரை என்ன நடவடிக்கை தீவிரப்படுத்தி உள்ளீர்கள் என்று மக்களிடம் கூறுவதை விட்டுவிட்டு விளக்கு பிடிக்க சொல்ரா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பவும் லூசுத்தனமாக இருக்கிறது.கொரோனாவுக்கு விளக்கு பிடிப்பதற்கும் என்ன சம்பந்தம்.சரியான தலைவர்களை தேர்வு செய்திருந்தால் நோய்க்கு சரியான தீர்வு என்ன என்று தெரிந்திருக்கும்

      நீக்கு
  2. நாட்டுக்கும், உங்கள் பொறுப்பில் உள்ள மக்களுக்கும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதற்கு உதவுங்கள் பிரதமரே. நோயை எங்களுக்கு அண்ட விடாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுங்கள். அறிவார்ந்த மக்கள் எவரும் இதை செய்ய மாட்டார்கள். இதைப் பற்றி நினைத்தால் சிரிப்பாக தான் இருக்கின்றது....

    பதிலளிநீக்கு
  3. கொரேனா வைரஸை விட்டு மக்களை பாதுகாப்பதற்கு ஏதாவது உருப்படியான விஷயம் ஒன்றுமில்லை இரவுல தூங்காம சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தை பார்த்துட்டு அந்த படத்தின் கிளைமக்ஸ் காட்சியை நாட்டு மக்களுக்கு செய்ய சொல்றது எவ்வளவு அறிவான செயல் காலகொடுமை நீ எல்லாம் எங்களை ஆள்வது

    பதிலளிநீக்கு