மின் கட்டணம் எவ்வளவு? வாட்ஸப்பில் புகைப்படம் அனுப்ப மின் வாரியம் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
மின்கட்டண விவரத்தை அறிந்து கொள்ள, மின்சார வாரியம் புதிய வழிமுறையை அறிவித்துள்ளது.
கொரானா பரவலை கட்டுபடுத்த நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவால் மின் கணக்கீடு எடுக்கபடமால் உள்ளது
இந்நிலையில் முந்தைய மாத மின்அளவீட்டை அடிப்படையாகக் கொண்டு, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என்று மின்வாரியம் அறிவித்திருந்தது.
ஆனால், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடைகள், வணிக நிறுவனங்கள் திறக்காமல் உள்ளதால் பழைய மின்கட்டணத்தை செலுத்தினால், அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இதையடுத்து மின் வாரியம் ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதன்படி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் தங்களின் மின் மீட்டரில் எவ்வளவு ரீடிங் என்று புகைப்படம் எடுத்து வாட்ஸப்பில் அல்லது இமெயில் அனுப்பினால் உங்கள் மின் கட்டணம் எவ்வளவு என தெரிவிக்கப்படும் என அறிவித்துள்ளது
உங்கள் பகுதிக்கான உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோரின் மின்னஞ்சலுக்கோ, வாட்ஸ் அப் எண்ணுக்கோ இந்த புகைப்படத்தை தொழிற்சாலைகளின் நிர்வாகம் அனுப்பலாம் மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரி, வாட்ஸ் அப் உள்ளிட்ட விவரங்களை https://www.tangedco.gov.in/contact.html என்ற இணையதளத்தில் நுகர்வோர் பெறலாம் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.
மேற்கண்ட கணக்கீடு முறைகள் தாழ்வழுத்த வீடு மற்றும் பிற மின்நுகர்வோர்களுக்கு பொருந்தாது.
மேலும், இந்த நடைமுறை ஊரடங்கு காலமான 03.05.2020 வரை மட்டுமே பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: முக்கிய அறிவிப்பு