ஸூம் ஆப் பாதுகாப்பானது அல்ல : மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
அட்மின் மீடியா
0
ஸூம் ஆப் பாதுகாப்பானது அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் பல நாடுகளுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
பலர் வீட்டிலிருந்தே தங்களது பணிகளை ஸூம் ஆப் மூலம் செய்து வருகின்றார்கள் இதனால் தற்போது ஸூம் ஆப் செயல்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதே போல் இந்திய நாட்டிலும் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு உள்ளநிலையில் பெரும்பாலானார் வீட்டிலிருந்தே பணிபுரியும் சூழல் உருவாகியுள்ளது. அப்படி வீட்டிலிருந்து பணியாற்றும் ஊழியர்கள் பலரும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் மற்றவர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் முறை மூலம் தொடர்புகொள்ள உபயோகிக்கும் ஸூம் ஆப் தான் பயன் படுகின்றது
மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஸூம் ஆப் பாதுகாப்பானது அல்ல என்றும் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் சில நாட்களுக்கு முன்பு கூகுள் நிறுவனமும் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸூம் ஆப்பை தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என அறிவித்தது குறிப்பிடதக்கது
Tags: முக்கிய அறிவிப்பு