Breaking News

ரசம் சாப்பிட்டால் கொரானா வைரஸ் வராதா? அய்யய்யோ நம்பாதீங்க

அட்மின் மீடியா
0
ரசம் சாப்பிட்டால் கொரானா வைரசை தடுக்க முடியுமா ?
கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள ரசம் சாப்பிடுங்கள், ரசம் கொரோனா வைரசை தடுப்பதாக வைக்கப்பட்ட விளம்பர பதாகை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த விளம்பர பலகையை வெளிநாடுகளில் பல இடங்களில் வைத்து ரசம் உடலுக்கு நன்மைகள் மட்டுமின்றி, கொரோனாவிற்கும் பாதுகாப்பு தரும் விளம்பர பலகையை வைத்துள்ளனர்.

இந்த செய்தி சமுகவளைதளத்தில் பலர் ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

ரசம் சாப்பிடுவது உடலுக்கு நன்மையை அளிக்கும் என்பதை பலரும் அறிந்து இருப்போம். 

ரசம், இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு நன்மை அளிக்கும் என்றாலும், கொரோனா வைரஸை தடுக்குமா அல்லது தடுப்பு மருந்தாக செயல்படும் என்பது அறிவியல்பூர்வமாக ஆதாரமில்லாத தகவல். 

உலகநாடுகளில்   லட்சத்திற்கும் அதிகமான மக்கள்  கொரானா வைரஸால் பாதிக்கபட்டுள்ளார்கள்

பல ஆயிரமக்கள் இறந்துபோய்யுள்ளார்கள்

உலகநாடுகள் அனைத்தும் இந்த கொரானா வைரஸக்கு மருந்து கண்டுபிடிக்கமுடியாமல் திணறுகின்றார்கள்

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்


அட்மின் மீடியா ஆதாரம்

ஏற்கனவே நாம் டெட்டால்  கொரோனா வைரஸைக் கொல்ல முடியாது என்று டெட்டால்  நிறுவனம் தெளிவுபடுத்தியதை ஒரு பதிவாக போட்டு இருந்தோம்


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback