Breaking News

கொரானா வதந்திகளும் உண்மைகளும்: கொரோனா வைரஸ் என்றால் என்ன? பாதுகாக்கவும், தற்காத்து கொள்ளவும் என்ன செய்யவேண்டும்,

அட்மின் மீடியா
0






கொரோனா வைரஸ் என்றால் என்ன?


கொரோனா வைரஸ் COVID என்ற வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது.


கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது?


இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் ஆகியவற்றின் மூலம் பிறருக்கு பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்





கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துவிட்டார்களா?


உலகம் முழுக்க பரவிவரும் இந்த கொரானாவிற்க்கு இதுவரை  மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.  பல நாடுகளில் இதற்க்கான ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர்.


கொரோனாவில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது?



இருமல், தும்மல், சளி, காய்ச்சல் போன்றவை மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் கட்டாயம் மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டும். மக்கள் கூட்டமாக இருக்கும்  இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். எப்போதும் நன்றாக கை கழுவ வேண்டும்.



கொரோனா வைரஸ் சம்மந்தமான பொய் செய்திகள்

  • பூண்டும், நல்லெண்ணெய்யும் கொரோனா வைரசை தடுக்கும் என்ற சமூகவலிதளங்களில் ஒரு செய்தி பரவுகின்றது. பூண்டு சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், கொரோனாவை தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கோ, நல்லெண்ணெய்க்கோ இல்லை என்கிறது.
  • வயதானவர்களை மட்டுமே கொரோனா தாக்கும் என்ற ஒரு செய்தியும் பரவுகின்றது  ஆனால், வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் கொரோனா பரவும் என்று  உலக சுகாதார மையம் கூறுகின்றது
  • முகக்கவசம் அணிந்துவிட்டால் கொரோனா உங்களுக்கு வராது என்ற செய்தியும் பரவுகின்றது இதுவும் உண்மையில்லை நிலவுகிறது.
  • கொரோனா வைசரசால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மரணம் நிச்சயம் என்று பலர் வதந்தி பரப்புகின்றனர். ஆனால் அதுவும் உண்மையில்லை உலக அளவில் கொரானாவால்  பாதிக்கபட்டவர்கள்   அதிகம் அதேசமயம் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களுள் 2 சதவீதத்திற்கும் குறைவானர்களே மரணமடைந்துள்ளனர். என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

  • அதேபோல் ஆல்கஹால்  அருந்தினால்  கொரானாவை குணப்படுத்தலாம் என வதந்தியும் பரவி வருகின்றது . அதனையும் நம்பவேண்டாம்  ஆல்கஹால் என்பது கலந்த கிருமிநாசினியாக பயன்படும்  மதுவால் கொரோனா வைரசை கொல்ல முடியாது

அட்மின் மீடியா சார்பாக ஒரு வேண்டுகோள் முதலில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். யாருக்கும் அதனை பகிர வேண்டாம்.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback