Breaking News

8 நாட்களுக்கு வங்கி விடுமுறையா? வலம் வரும் வாட்ஸ்-அப் வதந்தி!!

அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் நடைபெற இருந்த, வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால், அடுத்த வாரம், வங்கிகள் செயல்படும்' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 31 மற்றும் பிப்., 1ம் தேதிகளில், நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, மார்ச், 11 முதல், 13 வரை, மூன்று நாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும், அப்போது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசுடன், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள், தொடர்ந்து பேச்சுவார்த்தை முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, மூன்று நாள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதனால், வங்கிகளுக்கு தொடர் விடுமுறை இல்லை.






Tags: மறுப்பு செய்தி

Share this