Breaking News

கியாமத்தின் அடையாளம் என ஷேர் செய்யும் செய்தி ஹதீஸ் உண்மையா?

அட்மின் மீடியா
0
கேட்டதை பார்பதை பரப்புபவன் பொய்யன்
தற்போது சமூக வலைதளங்களில்  ஒரு ஹதீஸ் உலாவிக் கொண்டு இருக்கிறது அதாவது

நபி(ஸல்)அவர்கள் சகாபாக்களிடம் பேசிக் கொண்டிருந்த போது.சஹாபாக்கள் நபி அவர்களிடம் கேட்டார்கள் கியாமத் நாளின் கடைசி அடையாளம் எதுவென்று? நபி கூறினார் பள்ளியின் வாசல் மூடப்படும் பாங்கு ஓசை கேட்டும் வீட்டிலே தொழுவார்கள்..ஜூம் ஆ--- லுகர் தொழுகையாக மாற்றப்படும் கொடிய நோய்கள் வந்து கொத்தாக இறப்பார்கள்.... அவ்வப்போது  ஓர் இரவில் மகதி (அலை)அவர்கள் ஊன்றுகோல் ஊன்றி வருவார் அவரை தொடர்ந்து தஜ்ஜால் தோன்றுவான் அதுதான் கியாமத் நாளின் கடைசி அடையாளம் ஆகும்......ஆகையால் தஜ்ஜால் ஆட்சி வந்தது -கியாமத் நெருங்கியது....... ஹதீஸ் 189:17

இங்கு குறிப்பிட்டுல்ல எண் 189:17

எந்த ஹதீஸிலும் இப்படிப்பட்ட எண் இலக்கம் பயண்படுத்தப்படவில்லை.

இந்த செய்தி ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும் 

அல்லாஹ்விற்க்கும் அவனது தண்டனைக்கும் அஞ்சிக்கொள்ளுங்கள்

நமது நபியவர்கள் கூறியதை கூட நினைத்து நீங்கள் பயப்படமாட்டீர்களா??

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'என் மீது பொய் சொல்லாதீர்கள்! என் மீது பொய் சொன்னவன் நரகத்தில் நுழையட்டும்!

அறிவிப்பவர் : அலி(ரலி)
ஆதார நூல்கள் : புகாரீ -106, முஸ்லிம் 2)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீதும் கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!'
அறிவிப்பவர் : முகீரா(ரலி)
நூல்கள் : புகாரீ 1291, முஸ்லிம் 5


வதந்திகளை பரப்புவோருக்கு வதைக்கும் வேதனை


إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ (القرآن 24:19)  
 
விசுவாசங்கொண்டோர்கிடையில் இவ்வாறான மானக்கேடான விஷயம் பரவ வேண்டும் என விரும்பிகிறார்களோ நிச்சயமாக அத்தகையோர்களுக்கு இம்மை, மறுமையில் இழிவான வேதனை அவர்களுக்கு உண்டு. 

அல்குர்ஆன் 24:19

பொய்யான செய்தியை மனித உருவத்தில் ஷைத்தானும் பரப்புவதுண்டு

وحَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْأَشَجُّ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ عَنْ عَامِرِ بْنِ عَبَدَةَ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ إِنَّ الشَّيْطَانَ لِيَتَمَثَّلُ فِي صُورَةِ الرَّجُلِ فَيَأْتِي الْقَوْمَ فَيُحَدِّثُهُمْ بِالْحَدِيثِ مِنْ الْكَذِبِ فَيَتَفَرَّقُونَ فَيَقُولُ الرَّجُلُ مِنْهُمْ سَمِعْتُ رَجُلًا أَعْرِفُ وَجْهَهُ وَلَا أَدْرِي مَا اسْمُهُ يُحَدِّثُ. (رواه مسلم في مقدمته)

அப்துல்லாஹ் (ரளி) கூறினார்கள்: ஷைத்தான் மனித உருவத்தில் ஒரு சமூகத்தாரிடம் வந்து பொய்யான செய்திகளை கூறுவான். அதனால் அவர்கள் பிறிந்துவிடுவார்கள். அவர்களில் ஒருவர் இந்த செய்தியை நான் ஒருவனிடமிருந்து கேட்டேன். அவனுடைய முகம் மட்டும் எனக்கு ஞாபகம் இருக்கிறது, அவன் பெயர் எனக்கு தெறியாது என்று கூறுவார். (முஸ்லிம்)


செய்தியை தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءكُمْ فَاسِقٌ بِنَبَأ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِين. (القرآن 49:6)

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.

 (திருக்குர்ஆன் 49:6)

இந்த நபிமொழிகளை படித்தாவது திருந்துங்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளுங்கள்

பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Share this