Breaking News

முன்னாள் குடியரசு தலைவர் பக்ருதீன் குடும்பம் வாழும் நிலையை பாருங்கள் ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
முன்னாள் குடியரசு தலைவர் பக்ருதீன்  குடும்பம் வாழும் நிலையை பாருங்கள் என்று ஒரு புகைப்படத்தை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள் 

அந்த செய்தியின் உண்மை என்ன என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?


மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள நபர் முன்னாள் குடியரசு தலைவர் பக்ருதீன் இல்லை

மேலே உள்ள அந்த அந்த புகைப்பட சம்பவம் நடந்தது அஸ்ஸாம் மாநிலம் சோட்டியா  மாவட்டத்தில் 426 இஸ்லாமிய குடும்பங்கள் அரசு நிலத்தில் குடியிருந்ததாக கூறி அவர்களின் வீடுகள் இடித்து அவர்களை வெளியேற்றபட்டனர்

ஆனால் அவர்கள் பாஜாகவிற்க்கு ஓட்டு போடவில்லை என்று அவர்கள் மீது வேண்டு என்றே பொய்யான குற்ற சாட்டு கூறி அவர்களின் வீடுகலை இடித்துவிட்டார்கள் என்றும் ஒரு காரணம் கூறப்படுகின்றது

மேலும் இச்சம்பவம் 24.12.2019 அன்று நடந்தது

அந்த சம்பவத்திற்க்குபிறகு ஜமாத்தே இஸ்லாமியஇந்த் அமைப்பினர் அவர்களை சந்தித்து ஆருதல் கூறி அவர்களுக்கு உதவி செய்த போது எடுக்கபட்ட புகைப்படம் தான் அது

அதனை தவறாக புரிந்து கொண்டு முன்னாள் குடியரசு தலைவர் பக்ருதீன் என்று பொய்யாக சிலர் பரப்பி வருகின்றார்கள்

அட்மின் மீடியா ஆதாரம் 1



http://www.indiatomorrow.net/eng/assam-426-muslim-families-evicted-alleged-for-not-voting-for-bjp


அட்மின் மீடியா ஆதாரம் 2 

http://jamaateislamihind.org/eng/jamaat-provides-the-healing-touch-to-evicted-people-of-chotia-assam/


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


மேலும் அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பார்க்க அட்மின் மீடியா ஆப்பினை டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்
 
 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback