Breaking News

பிஜேபி MLA கரனி சிங் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்தாரா/ உண்மை என்ன

அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிஜேபி MLA கரனி சிங் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்ததாக ஒரு செய்தியுடன் ஒரு வீடியோவையும் பலர் ஷேர் செய்து வருகின்றார்கள்

அந்த செய்தி உண்மையா என்றும் அந்த சம்பவம் எங்கு நடந்தது என்றும், ஏன் அன்னல் அம்பேத்கர் அவர்களின் சிலையை உடைத்தார்கள் எனவும் அட்மின் மீடியா வாசகர்கள் கேட்ட கேள்வியின் விடையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



ஆம் பலரும் ஷேர் அந்த செய்தி  பொய்யானது

அப்படியானால் இதன் உண்மை நிலை என்ன? 


பலரும் ஷேர் செய்தியில் குறிப்பட்டது போல் உண்மையில் இது அம்பேத்கர் சிலை இல்லை, இது கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் அவர்களின் சிலை ஆகும். 

தெற்கு திரிபுரா மாநிலத்திலுள்ள பெலோனியா என்ற நகரில், கல்லூரி ஒன்றுக்கு மத்தியில் கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் முழு உருவ சிலை ஒன்று அமைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் இடதுசாரிகள் வெற்றி பெற்றதையடுத்து இந்த சிலை நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது.

இடதுசாரிகளின் தேர்தல் வெற்றியை குறிக்கும் லெனின் சிலையைதான் கடந்த 2018, மார்ச் 5 ஆம் தேதி சுமார் மதியம் 2.30 மணிக்கு அந்த பகுதிக்கு ஜேசிபி இயந்திரம் ஒன்று கொண்டுவரப்பட்டு, ’பாரத் மாதா கீ ஜே’ என்ற கோஷத்திற்கு இடையே லெனின் சிலை இடித்து தள்ளப்பட்டது.

இந்த சம்பவம் நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில், 25 ஆண்டுகளாக திரிபுராவில் அசைக்க முடியாத கட்சியாக விளங்கிய இடதுசாரிகள், மத்தியில் ஆளும் பாஜாகவிடம் தோற்றுப்போனது. இதன் காரணத்தால் தான் கம்யூனிஸ்டின் சின்னமாக விளங்கிய லெனின் சிலை உடைக்கப்பட்டது பாஜகவினரால். 

இது சம்மதமாக பல அரசியல் தலைவர்களும் கடும் கண்டனத்தை சம்பவம் நடந்த போதே தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.







எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback