CAAவுக்கு எதிராக 600 கிலோமீட்டர் தூரத்திற்க்கு மனித சங்கிலி கேரளா அதிரடி
அட்மின் மீடியா
0
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், திரும்பப் பெற வலியுறுத்தியும் கேரள மாநிலத்தில் 620 கி.மீ தொலைவுக்கு மனிதச் சங்கிலி உருவாக்கப்பட்டது.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் உருவாக்கப்பட்ட இந்த மனிதச் சங்கிலி வடக்கு கேரளாவின் காசர்கோடு நகரில் தொடங்கி, தெற்கே களியக்காவிளை வரை உருவாக்கப்பட்டது.
ஏறக்குறைய 60 லட்சம் முதல் 70 லட்சம் மக்கள் வரை இந்த மனிதச் சங்கிலியில் பங்கேற்றார்கள் எனக் கூறப்படுகிறது.
Tags: முக்கிய செய்தி