குழந்தைகளை பள்ளிக்குக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய்
அட்மின் மீடியா
1
பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடிய தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வழங்கும் தாய் மடி திட்டத்தை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கி வைத்தார்.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று ஜெகன் மோகன் முதலமைச்சராக பதவி ஏற்றதில் இருந்தது பல அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
இதன் முதல் படியாக அரசு பள்ளிகளில் வழங்கக்கூடிய மதிய உணவு திட்டத்தில் 6 நாட்களுக்கும் வெவ்வேறு விதமான உணவு வகைகள் வழங்குவதோடு ஒரு இனிப்பு மற்றும் வேகவைத்த முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
இதே போல் ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு பிள்ளையும் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பக் கூடிய தாய்மார்களுக்கு ஆண்டுக்கு 15,000 ரூபாய் வழங்கும் அம்ம வடி திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கிவைத்தார்.
Tags: முக்கிய செய்தி
Cm na iver than thanks for saliut jainth
பதிலளிநீக்கு