Breaking News

குடியுரிமை சட்டத்திற்க்கு ஆதரவாக நடந்த மாநாட்டு புகைபடம் உண்மை என்ன

அட்மின் மீடியா
1
நாடு முழுவதிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாய் எழுந்து வரும் நிலையில்.

பாஜக கட்சி சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஒரு சில ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து வருகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக லட்சக்கணக்கான மக்கள் திரண்ட கூட்டம்.

என்று ஒரு  செய்தியை மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் 
உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

முதல் புகைப்படம்

2016 அக்டோபர் மாதம் மகாராஷ்டிராவில் மரத்தா சமுதாயம் இடஒதுக்கீடுக்காக மேற்கொண்ட பேரணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை எடுத்து இன்று குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு என பொய்யாக சமுகவளைதளத்தில் பரப்புகின்றனர்

இரண்டாம் புகைப்படம்

மகாராஷ்டிராவில் 14 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று தூக்கில் தொங்கவிட்ட சம்பத்திற்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் மரதாஸ் சமுதாயத்தினர் மேற்கொண்ட பேரணி

அட்மின் மீடியா ஆதாரம்

மேலே உள்ள இணைய தளத்தில் உள்ள அதே பழய போட்டோவை எடுத்து இன்று நடந்த  ஆதரவு போராட்டம் என பொய்யாக பரப்பி வருகின்றனர்


எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

1 Comments

  1. ஆனால் காவி வண்ணக் கொடிகள் மட்டுமே தெரிகின்றனவே

    ReplyDelete