Breaking News

பாரத் மாதாகி ஜே என்று சொல்லிய முதியவரை தாக்கும் இஸ்லாமிய இளைஞர்கள்: உண்மை என்ன

அட்மின் மீடியா
0
பாரத் மாதா கி ஜெய் என்று கூச்சலிட்டதற்காக டெல்லி ஜாபராபாத்தில் உள்ள இந்த முதியவருக்கு முஸ்லிம் இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்.
இதை ஏன் மீடியா காட்டவில்லை.?  உண்மையான இந்தியர்களால் இது ஏன் வைரலாகவில்லை.
தயவுசெய்து எழுந்திருங்கள்.
ஜெய் ஹிந்த்

என்று ஒரு  செய்தியையும் ஒரு வீடியோவையும் மக்கள் சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டு இருக்கின்றார்கள் 

அந்த செய்தியின் உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 

யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன

அந்த சம்பவம் நடந்தது அக்டோபர் மாதம் 2019

இந்த சம்பவம் நடந்த இடம் ராஜஸ்தானில் உள்ள பில்வாரா பகுதியில் இருக்கும் அசாத் சவுக் என்கின்ற இடத்தில் இருக்கும் கடைவீதி 

அந்த முதியவர் உடல் நலம் சரியில்லாத மனநலம் குன்றியவர். ”வயதானவர் அடிக்கடி  அந்த பகுதியில் சென்று வருபவர்களிடம் கோஷங்களை எழுப்பி  சண்டையிடுவது இவரது வழக்கம் 

அவரை அடித்து உதைத்த மக்கள் மீது அவரது மகன் அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யபட்டுள்ளது

மகனிடம் தந்தையை மனநலக காப்பகத்தில் சேர்க்க அங்கு உள்ளவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்

மேலும் இதில் அந்த முதியவரை அடித்தவர்கள் முஸ்லீம் என யாரும் இல்லை

அட்மின் மிடியா ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Share this