Breaking News

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு இல்லை- சன்னி வக்ஃப் வாரியம் அறிவிப்பு

அட்மின் மீடியா
2
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறோம்; தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யமாட்டோம் என தகவல் வந்துள்ளது


உச்சநீதிமன்றம் காலையில் தீர்ப்பு அலித்த போது சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர்   5 ஏக்கர் நிலம் எங்களுக்கு ஏற்புடையது இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பில் முரண்பாடுகள் இருப்பதால் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று கூறினார்.



ஆனால் இந்நிலையில், உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியம் தலைவர் சுஃபர் பரூகி சார்பில் ஒரு செய்தி குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்,  அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியத்தின் தலைவராக ஒரு  விஷயத்தை நான் தெளிவுப் படுத்த விரும்புகிறேன். அதாவது உத்தரப்பிரதேச சன்னி வக்ஃபு வாரியத்தின் சார்பில் இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மறுசீராய்வு  மனுவை நாங்கள் தாக்கல் செய்ய மாட்டோம்.




இது தொடர்பாக ஏதாவது ஒரு வழக்கறிஞர் அல்லது வேறு அமைப்புகள் யாராவது நாங்கள் மறுசீராய்வு செய்வோம் என்று கூறினால் அது எங்களுடைய  கருத்து அல்ல. மேலும் 2010-ஆம் ஆண்டு அலாகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தற்போது உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளதற்கு நாங்கள் நன்றி  தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.


Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback

2 Comments

  1. யார் கொடுத்த நிர்பந்தமோ?அல்லது மிரட்டலோ?

    ReplyDelete