Breaking News

குவைத்தில் பணக்காரர் நாசி அல் கார்கி காலமானார். அவருக்கு இவ்வளவு சொத்துக்களா

அட்மின் மீடியா
2
குவைத்தில் பணக்காரர் நாசி அல் கார்கி காலமானார். அவரது புதையல் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் பாருங்கள். அவருடன் ஒரு துரும்பையும் எடுத்துச் செல்ல முடியாது. இது நம் அனைவருக்கும் ஒரு கடுமையான நினைவூட்டல்.


இந்த செய்தி உண்மையா ? பொய்யா? அவர் யார்? என்ன நடந்தது ? எங்கு நடந்தது? உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


மேலே சொன்ன பெயருக்கும் ஊருக்கும் சம்பந்தம் இல்லை அது பொய்யான செய்தி தான் 

ஆனால் மனிதன் இறந்த பிறகு இந்த உலகத்தை விட்டு  செல்லும் போது செய்த நன்மையை தவிர வேறு எதுவும் எடுத்துச் செல்வதில்லை என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை 

அவர் இறந்த புகைப்படத்துடன் சில போட்டோக்கள் அதாவது கார் வைரம் அரண்மனை போன்ற படுக்கை அறை இவை அனைத்தும் இவர் சம்பந்தப்பட்ட போட்டோ இல்லை 

வேறு வேறு தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு இந்த சம்பவத்துடன் சேர்த்து பொய்யாக அனுப்பப்பட்டுள்ளது

அப்படியானால் அவர் யார் ? எங்கு நடந்த செய்தி இது

டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு (Republic of Trinidad and Tobago) என்பது அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கெறிபியன் பிரதேசத்தில் உள்ள இரு தீவுகளை முதன்மை நிலப்பகுதியாக கொண்ட நாடு ஆகும். தென் அமெரிக்கா நாடான வெனீசூலாவின் வடகிழக்கே இத்தீவுகள் அமைந்துள்ளன இது தான் அவரின் 
சொந்த ஊர்

அவர்  பெயர். ஷெரோன் சுக்தியோ
அவர் பழைய கார் வாங்கி விற்க்கும் வியாபாரி, மேலும் ரியல் எஸ்டேட்    கடத்தல் போன்ற  தொழில் மூலம் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவர் எப்போதும் சுமார் 100 சவரன் தங்க நகைகளுடன் தான் வலம் வருவார்.

 அவர் கடந்த 26 .03. 2018 அன்று சுட்டு கொல்லப்பட்டார்

அவரின் உடலை பொதுமக்கள் பார்வைக்காக அவர் எப்போதும் அணியும் தங்க நகைகளுடன் வைக்கபட்டது. அவர் இறுதியாக தகனம் செய்யப்பட்டார்,


சமுக வலைதளத்தில் இவர் இறப்புடன் இணைத்து பரப்பப்படும் ஆடம்பரமான புகைபடங்கள் உண்மை இல்லை

அட்மீன் மிடியா ஆதாரங்கள் 

https://realradio.iheart.com/content/2018-04-04-slain-businessman-buried-with-over-100k-in-jewelry/

அவரது  இறுதி சடங்கின் வீடியோ


 எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback

2 Comments