உங்க சக்கரை கார்ட்டை இன்னும் அரிசி கார்டாக மாற்றவில்லையா.. மேலும் 3 நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கு தமிழக அரசு
அட்மின் மீடியா
0
அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு!
சர்க்கரை அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற நவ 29ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற விரும்புவோர் நவ.26ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாகவோ, அல்லது நியாய விலைக்கடைகளிலோ விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்ற விரும்புவோர் www.tnpds.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ, வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆணையர் அலுவலகங்கள் மட்டுமின்றி நியாய விலைக்கடைகள் வாயிலாக வரும் நவ.29 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவேஇதுவரை சர்க்கரை கார்டுகளை அரசி கார்டுகளாக மாற்றாதவர்கள் இந்த மூன்று நாளில் மாற்றி பயன்பெறலாம்
Tags: முக்கிய செய்தி