காஸாவில் மீன் பிடிக்க தடையா? மீன்கள் மொத்தமாக கரை ஒதுங்கியதா? உண்மை என்ன
அட்மின் மீடியா
0
காசாவிலிருந்து பாலஸ்தீனியர் யாரும் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லக்கூடாதென்று இஸ்ரேல் அரசு முஸ்லிம்களை தடைசெய்துள்ளது ஆனால் அல்லாஹ் சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் . மீனவர்களை கடலுக்குள் செல்லவிடாமல் மீன்களை கரைக்கு வரச்செய்துவிட்டான் . சுபஹானல்லாஹ் ... அல்லாஹ் பரிசுத்தமானவன் ... என்ற ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
இந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான 1993 இல் கையெழுத்திடப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கைகளின் கீழ், காசா பகுதியின் கரையிலிருந்து 20 கடல் மைல் வரை மீன்பிடிக்க இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் , அண்மையில் இந்த வரம்பை 5 கடல் மைல் ஆக இஸ்ரேல் குறைத்தது.
மேலே கூறப்பட்ட இந்த செய்தியைத்தான் பாலஸ்தீனர்கள் கடலுக்கு செல்லாவிட்டாலும் கடற்கரைக்கு மீன்கள் வந்துவிட்டது என பொய்யான செய்தியை பரப்புகிறார்கள்
அந்த வீடியோக்களும் உண்மை அல்ல
கடலில் ஏற்படும் இயற்கை மாற்றத்தால் அப்பகுதியில் உள்ள கடற்கரைக்கு கூட்டமாக மீன்கள் இறந்தும் அல்லது உயிருடனும் கரை ஓதுங்கும்.
சில நேரங்களில் கடலில் மீன் பிடிக்க வீசிய வலைகள் கடல் அலைகளின் காரணமாக அந்த பகுதி கடற்கரைக்கு மீன்களுடன் கரை ஓதுங்கும்
இது போல் கரையொதுங்கிய சில வீடியோக்களை எடுத்து பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் மீன்பிடிக்க தடையை என்ற செய்தியுடன் இணைத்து பொய்யாக பரப்புகின்றனர்
அட்மீன் மீடியாவின் ஆதாரம்
இந்த வீடியோ 2018 லேயே பதிவேற்றம் செய்யப்பட்டது
உள்ளே சென்று தேதியை பார்க்கவும்.
அட்மீன் மீடியா ஆதாரம்
பாலஸ்தீன் காசா பகுதியில் மீன் பிடி தடை என
செய்தியாக வந்தது 2019 வருடம்
செய்தியாக வந்தது 2019 வருடம்
https://www.timesofisrael.com/israel-reduces-gaza-fishing-zone-again-in-response-to-balloon-attacks/
பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்.
Tags: மறுப்பு செய்தி