மரத்தை வெட்டினால் ரத்தம் வருகின்றது என பரவும் வீடியோ ? உண்மையா
அட்மின் மீடியா
1
ஏமன் நாட்டில் உள்ள மரம், ஆதாமின் மகன் ஆபேல் கொல்லப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது, வெட்டினால் இரத்தம் வடிகின்றது, உலகில் வேறெங்கும் காண முடியாத மிக அற்புதமான மரம்.. எல்லா புகழும் இறைவனுக்கே....... என்ற ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த செய்தி உண்மையா? என பலரும் அட்மின் மீடியாவிடம் கேட்க அட்மின் மீடியா அந்த செய்தியின் உண்மை தேடி களம் கன்டது.
அப்படியானல் உண்மை என்ன
அந்த மரத்தின் பெயர் டிராகன் மரம் (Dracaena cinnabari, Socotra dragon tree) அல்லது டிராகன் குருதி மரம் (dragon blood tree) என்று அழைக்கபடுகின்றது இந்த மரம் பெரும்பாலும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சுகுத்திரா சிறு தீவுகளைத் தாயகமாகக் கொண்டபகுதியில் உள்ளது மேலும் ஏமன் நாட்டிலும் இம்மரம் உள்ளது இந்த டிராகன் மரம் மற்ற மரங்களை போல் அல்லாமல் இம்மரங்களை வெட்டினால் இம்மரத்தில் இருந்து செந்நிற பிசின்களை சுரப்பதனால் இதற்கு இப்பெயர் அமைந்தது. டிராகன் குருதி மரம் மிகவும் புகழ் பெற்றதும் அழகானதும், சுகுத்திராத் தீவில் தனிச்சிறப்பு வாய்ந்த தாவரமும் ஆகும். இம்மரம் அடர்த்தியாக நிரம்பிய கிரீட குடை போன்ற தோற்றத்தைக் கொண்டது.
அட்மின் மீடியா ஆதாரம்
அட்மின் மீடியா ஆதாரம்
https://www.youtube.com/watch?v=ZlXav1CYTtc
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி
Semmaram vetinalum ipadithan blood varum
பதிலளிநீக்கு