Breaking News

அமேசான் காட்டின் நடுவில் அல்லாஹ் என்ற வார்த்தை வடிவில் நீர் வீழ்ச்சி ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
அமேசான் காட்டின் நடுவில் அல்லாஹ் என்ற வார்த்தை வடிவில் நீர் வீழ்ச்சி ஒன்று இரகசியமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .அதனைக் காண்பவர்கள்  இஸ்லாத்தை தழுவுகின்றனர் என்ற காரணத்தினால்  பிரேசில் அரசு அதைப் போய்ப் பார்ப்பதை தடை செய்து வைத்துள்ளது  . அல்லாஹு அக்பர்  .இதனை அனைத்து குரூப்களுக்கும் அனுப்பி நன்மையை பெற்றுக்கொள்ளவும் என்ற ஓர் செய்தியினை பலரும் சமூக வலை தளங்களில் ஷேர் செய்கின்றார்கள்



அந்த செய்தி உண்மையா? என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அது பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் உள்ள ஓர் நீர்வீழ்ச்சி இல்லை . 

அது ஓர் அற்புதமான ஓவியம் நீர்வீழ்ச்சியில்  அல்லாஹ்வின் பெயர் வரும் படி வரைந்த  அந்த போட்டோவை இப்படி தவறாக சமுகவளைதளத்தில் பொய்யாக பரப்புகின்றனர்.

மேலும் இந்தபடம் கடந்த 2012 ல் வரையப்பட்டது
 
 அட்மீன் மிடியா ஆதாரம் 1




இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து வஸ்துக்களும் இறை அத்தாட்சிகள் தான் நன்கு சிந்திப்பவர்களுக்கு அதில் பல சான்றுகள் உள்ளது

அதை எதையும் யாராலும் தடைசெய்து மறைத்து அடைத்து வைக்க முடியாது...

எனவே அல்லாஹ்வின் பெயரால் பொய்யான செய்தியினை பரப்பாதீர்கள் 

எதையும் தீர ஆராயாமல் ஷேர் செய்யாதீர்கள்...

அது உங்களுக்கு கேடுத்தான்

அந்த வலையில் நீங்கள் வீழ்ந்து விடாதீர்கள்...

சொல்வது அட்மின் மீடியாவின் கடமை...

பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்.

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback