Breaking News

சுஜித் உடல் மீண்டும் குழிக்குள் இறக்கி நல் அடக்கம் செய்யப்பட்டது

அட்மின் மீடியா
1
குழந்தை சுஜித் இறந்த நிலையில் இன்று அதிகாலை 4:30 மணியளவில் உடல் மீட்கபட்டது

ஆழ்துளை கிணற்றில் விழுந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்தின் உடல் மணப்பாறை அருகே உள்ள ஆவாரம்பட்டி புதூர் கிராமத்தில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு சிறுவனின் உடல் நேராக கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டது.


அங்கு கிறிஸ்துவ மத வழக்கப்படி இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது

 அதில் நடுகாட்டுப்பட்டி சுற்றுவட்டார கிராமமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சிறுவன் உடல் கடந்த 5 நாட்களாக மண்ணுக்குள் கிடந்ததால் அவனது உடல் சிதைந்து நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

 இந்தநிலையில் அதனை அஞ்சலிக்காக வைக்கமுடியாது என்பதால் துரிதமாக அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் அமைச்சர்கள்
சிறுவன் சுஜித்தை நல்லடக்கம் செய்யும் வரை அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர். அவர்களும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு சுஜித் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


குழிக்குள் போராடி மாண்டு மீண்டும் குழிக்குள் இறக்கப்பட்டான் சுஜித்

சுஜித்தின் உடல் நல் அடக்கம் செய்யபட்டது

கண்ணீருடன் தமிழகம் பிரியாவிடை அளித்தது

தன் உயிரை கொடுத்து உலகிற்கு பாடம் புகட்டியவன் சுஜித்

Give Us Your Feedback

1 Comments