Breaking News

9 வங்கிகள் மூடபடுகின்றதா ? உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 9 வங்கிகள் நிரந்தரமாக மூடப்படபோகின்றது அந்த வங்கிகளில் உங்கள் பணம் வைத்து இருந்தால் அதனை முழுசா உடனே எடுத்துடுங்க வங்கிகளின் விவரங்கள், கார்ப்பரேஷன் வங்கி, யூசிஓ வங்கி, ஐடிபிஐ , பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, ஆந்திர வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 9 வங்கிகள் மூடப்பட உள்ளன.  இந்த வங்கிகளில் கணக்குகள் இருந்தால் உங்கள் பணத்தை பாதுகாத்து கொள்ளுங்கள் மற்றும் அனைவரும் பகிரச் செய்யுங்கள். இது உச்ச நீதிமன்ற உத்தரவு.

என்று ஒரு செய்தியை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அட்மின் மீடியா களம் கண்டது


இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து கடந்த 25.09.2019அன்றே  ரிசர்வ் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில், ” ஆர்பிஐ சில வணிகமயமான வங்கிகளை நிரந்தரமாக மூட உள்ளதாக சில சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

ரிசர்வ்  வங்கி மறுப்பு தெரிவித்தும் அந்த பொய்யான செய்தியினை பலரும் ஷேர் செய்வது வருத்தத்திற்குரியது.

எனவே யாரும் பொய்யான் செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியா ஆதாரம்


Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback