காஷ்மீரில் போலிஸார் வீடு புகுந்து பெண்களை அடித்தார்களா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் போலிஸார் உடையில் ஓர் இஸ்லாமிய குடும்பத்தின் வீட்டில் புகுந்து அடித்து கொடுமை படுத்துவது போல் ஓர் வீடியோவை பலரும் ஷேர் செய்து கொண்டு இருக்கின்றார்கள்
மேலும் அந்த வீடியோவில் காஷ்மீர் என்றும் இருக்கின்றது.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அட்மின்
மீடியா அந்த செய்தி உண்மையா ? பொய்யா ?
என்ன நடந்தது?
எங்கு நடந்தது?
எப்போழுது நடந்தது?
எதற்காக நடந்தது ?
என அட்மின் மீடியா களம் கண்டது
என்ன நடந்தது?
எங்கு நடந்தது?
எப்போழுது நடந்தது?
எதற்காக நடந்தது ?
என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த வீடியோவில் அட்மின் மீடியாவிற்க்கு எழுந்த சந்தேகம்
சந்தேகம் 1
அந்த வீடியோவில் உள்ள போலிசார் ஏன் முகத்தை மூடி வரவேண்டும்
சந்தேகம் 2
அந்த வீடியோவில் போலிஸார் அந்த பெண்களை அடிக்கின்றார் போல் தான் தெரியும் ஆனால் அடிக்கவில்லை
சந்தேகம் 3
அந்த வீடியோவில் போலிஸார் போட்டுள்ள உடை நம் இந்தியாவில் எந்த போலிஸாரும் போடவில்லை, மேலும் காஷ்மீர் போலிஸார் உடையும் அது இல்லை
எனவே இந்த சந்தேகத்தோடு விடையை தேடினோம் ஆம் அந்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்தது.
போலிஸார் உடையில் உள்ளவர்கள் போலிஸார் இல்லை
பாகிஸ்தான் நட்டில் சிந்து பகுதியில் விளையாட்டாக எடுத்த வீடியோ வினையானது
அந்த சம்பவம் நடந்தது பாகிஸ்தான் நாட்டில்
அந்த சம்பவம் கடந்த 05.05.2019 அன்று நடந்தது
ஆதாரம் 1
மேலும் இது போல் சமூக வலைதளங்களில் காஷ்மீரில் நடந்த கொடுமையை பாரீர் என்று ஏதோ ஒரு இடத்தில், என்றோ நட்ந்த ஏதோ ஒரு வீடியோவினை காஷ்மீரில் தான் நடந்தது என்று ஷேர் செய்யும் சமுதாய அக்கறை உள்ளவர்களே நீங்கள் ஷேர் செய்த செய்தி பொய் என்று தெரிந்த பிறகு குற்ற உணர்ச்சி குத்தவில்லையா உங்களுக்கு
நாளை உண்மையாகவே காஷ்மீரில் நடந்தாலும் ஓர் வீடியோ நீங்கள் ஷேர் செய்யும் போது அதன் முக்கியம் மக்களுக்கு உணராமல் அதுவும் பொய் என்று நினைக்க தோன்றாதா புலி வருது என்ற கதை போல்......ஆகாதா
எனவே ஓர் செய்தி உங்களிடம் வந்தால் அது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொண்டு உண்மை செய்தியினை மட்டும் ஷேர் செய்யுங்கள்
மேலும் காஷ்மீர் சம்மந்தமான இதுவரை பரவிய பொய் செய்த்களின் தொகுப்பு கீழ் உள்ள லின்ங்கில்
Tags: மறுப்பு செய்தி
