காஷ்மீரில் தற்போது நடந்தவை என்று சமூக வலைதளங்களில் பரவும் பழைய வீடியோக்கள்
அட்மின் மீடியா
1
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து திரும்பப்பெற்ற பிறகு காஷ்மீர் தொடர்பான பல பொய்யான வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரப்பட்டே வருகிறது.
அப்படி கடந்த சிலநாட்களாக பலரும் ஷேர் செய்யபடும் வீடியோக்களின் தொகுப்பு
இவை அனைத்தும் பழைய வீடியோக்கள் ஆகும் , பலரும் இது தற்போது நடந்த சம்பவம் என்று ஷேர் செய்கின்றார்கள்
பொய் செய்தி 1
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள முஸ்லீம் மக்கள் தங்களையும் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளுமாறு பாகிஸ்தான் நாட்டின் கொடியை எரித்து போராட்டம் செய்வதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் 2016 ம் ஆண்டு நடந்தது ஆதாரம்
https://www.youtube.com/watch?v=uOja8nTBJUY
பொய் செய்தி 2
இந்திய அரசு சிறப்பு வாய்ந்த 370 சட்டபிரிவை நீக்கியத்ற்க்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற கூட்டம் என்று பலரும் ஷேர் செய்கின்றார்கள் ஆனால் இது ஒரு இறுதி ஊர்வலம் ஆகும்
இந்த சம்பவம் 2018 ம் ஆண்டு நடந்தது ஆதாரம்
https://www.youtube.com/watch?v=dtlR1Yip3RI
பொய் செய்தி 3
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாகவும், பாகிஸ்தானிற்கு
எதிராகவும் சவூதி இளவரசர் பேசியதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்
ஓரு வீடியோ பலராலும் ஷேர் செய்யபட்டு வருகின்றது
இந்த சம்பவம் 2019 ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்தது அவர் சவுதி இளவரசர் இல்லை ஆதாரம்
பொய் செய்தி 4
காஷ்மீரில் வெடித்தது போரட்டம் என்று ஒரு வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்கின்றார்கள்
இந்த சம்பவம் 2018 ம் ஆண்டு நடந்தது ஆதாரம்
பொய் செய்தி 5
காஷ்மீரில் உள்ள பள்ளிவாசல் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில்
அல்லாவை கும்பிடும் இடத்தில் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை பாருங்கள் என்று
பல புகைபடங்களை ஷேர் செய்கின்றார்கள்
இந்த சம்பவம் பல்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்தது ஆதாரம்
காஷ்மீர் சட்டபிரிவு ரத்தானதற்க்கு இஸ்லாமியர்கள் பாரத்மாதாகி ஜே என்று கோஷம் என்று ஓர் வீடியோவினை ஷேர் செய்கின்றார்கள்
இந்த சம்பவம் 2019 ம் ஆண்டுபிப்ரவரி மாதம் பெங்களுருவில் போரா முஸ்லீம்கள் நடத்தியது ஆதாரம்
https://www.youtube.com/watch?v=NwZ61hmRm_U
பொய் செய்தி 7
அந்த செய்தி 2014 ம் ஆண்டு காஸாவில் நடந்தது ஆதாரம்
https://www.bbc.com/news/world-asia-41427929
பொய் செய்தி 8
காஷ்மீரில் சிறப்பு சட்டபிரிவு நீக்கத்திற்க்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் என்று பலரும் ஓர் வீடியோவினை ஷேர் செய்கின்றார்கள்
இந்த சம்பவம் 2015 ம் ஆண்டு நடந்தது ஆதாரம்
https://www.youtube.com/watch?v=Bba8e_VfWLI
பொய் செய்தி 9
இந்திய ராணுவம் காஷ்மீர் வீடுகளில் கல்வீசுகின்றது என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
இந்த சம்பவம் 2016 ம் ஆண்டு நடந்தது ஆதாரம்
https://youtu.be/QDK8eXDlmyM
பொய் செய்தி 10
காஷ்மீரில் ரானுவம் தாக்கி அடித்து சித்ரவதை செய்து நாக்கை அறுத்தார்கள் என்றும் ,ஒரு சிலர் ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்த இளைஞர்ர்க்கு நேர்ந்த து என்று வீடியோவைபலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி ஜெர்மனியில் நடந்தது ஆதாரம்
இந்த சம்பவ ஆதாரம்
https://twitter.com/GEDV86/status/1084612815644704768
பொய் செய்தி 10
காஷ்மீரில் போலிஸார் வீட்டில் நுழைந்து பெண்களை அடித்து கொடுமை படுத்துகின்றார்கள் என்று பலரும் ஓர் வீடியோவை ஷேர் செய்கின்றார்கள்
அந்த வீடியோவில் உள்ள சம்பவம் பாக்கிஸ்தானில் நடந்தது
ஆதாரம் https://twitter.com/sindhpolicedmc/status/1127167061803896833?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1127167061803896833&ref_url=https%3A%2F%2Fwww.boomlive.in%2Fvideo-from-sindh-falsely-shared-as-police-excess-in-kashmir%2F
எனவே யாரும் பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்
காஷ்மீர் சம்மந்தமான உண்மையான செய்திகளை மட்டும் ஷேர் செய்யுங்கள்
மேலும் இது போல் சமூக வலைதளங்களில் காஷ்மீரில் நடந்த கொடுமையை பாரீர் என்று ஏதோ ஒரு இடத்தில், என்றோ நட்ந்த ஏதோ ஒரு வீடியோவினை காஷ்மீரில் தான் நடந்தது என்று ஷேர் செய்யும் சமுதாய அக்கறை உள்ளவர்களே நீங்கள் ஷேர் செய்த செய்தி பொய் என்று தெரிந்த பிறகு குற்ற உணர்ச்சி குத்தவில்லையா உங்களுக்கு
நாளை உண்மையாகவே காஷ்மீரில் நடந்தாலும் ஓர் வீடியோ நீங்கள் ஷேர் செய்யும் போது அதன் முக்கியம் மக்களுக்கு உணராமல் அதுவும் பொய் என்று நினைக்க தோன்றாதா புலி வருது என்ற கதை போல்......ஆகாதா
எனவே ஓர் செய்தி உங்களிடம் வந்தால் அது உண்மையா பொய்யா என்று தெரிந்து கொண்டு உண்மை செய்தியினை மட்டும் ஷேர் செய்யுங்கள்
எனவே யாரும் பொய்யான செய்திகளை ஷேர் செய்யாதீர்கள்
காஷ்மீர் சம்மந்தமான உண்மையான செய்திகளை மட்டும் ஷேர் செய்யுங்கள்
Tags: மறுப்பு செய்தி









