Breaking News

ஆன் லைனில் வாக்காளர் பெயர் சேர்க்க செப்டம்பர் 1 முதல் விண்னப்பிக்க்லாம்

அட்மின் மீடியா
0





எதிர் வரும்  01.09.2019  முதல் 30.09.2019 வரை கீழ் உள்ள லின்ங்கில் 
நீங்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க

பெயர் நீக்க..

வாக்காளர் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய

முகவரி மாற்றம் செய்ய

புகைப்படம் மாற்ற  என அனைத்தையும் நீங்கள் சரி செய்து கொள்ளலாம்


அதற்க்கு கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்து அதில் முதலில் உங்களுக்கு ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்யுங்கள் அதன் பிறகு லாங் இன் செய்யுங்கள்

https://www.nvsp.in/Forms/Forms/form6?lang=en-GB

மேலும் விவரங்களுக்கு

தமிழகத்தில், வாக்காளர் சரிபார்ப்பு பணி, அடுத்த மாதம் நடக்க உள்ளது.
இத்திட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப் 1ம் தேதி  முதல், 30 ம் தேதி வரை நடக்க உள்ளது.

அப்போது, வாக்காளர்களை சரி பார்ப்பதற்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக வருவர். அவர்களிடம், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது, தங்களுடைய பெயர் என்பதை உறுதிப்படுத்த, வாக்காளர்கள் உரிய ஆவணத்தை அளிக்க வேண்டும்.


  • பாஸ்போர்ட்,

  • ஓட்டுனர் உரிமம்,

  • ஆதார் கார்டு,

  • ரேஷன் கார்டு,

  • பான் கார்டு,

  • பிறப்பு சான்றிதழ்,

  • பள்ளி சான்றிதழ்,

  • வங்கி கணக்கு புத்தகம்,

  • தபால் கணக்கு புத்தகம்,

  • வருமான வரி அறிக்கை,

  • குடிநீர் ரசிது

  • தொலைபேசி கட்டணம்

  • மின் கட்டணம்

  • கேஸ் பில்

ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை சான்றாக காண்பிக்கலாம்.




மேலும் வாக்காளர் பட்டியல் அக்., 1 வெளியிடப்படும்.  

நவம்பர் மாதம்  2, 3, 9,10 ஆகிய தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆனையம் அறிவித்துள்ளது
 
 

Give Us Your Feedback