2 ஆக பிரிக்கப்படும் காஷ்மீர்..
அட்மின் மீடியா
3
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன்
பிரதேசங்களாக மாற்றம்!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிப்பதாக
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் அறிவித்துள்ளார்.
அதிரடி திருப்பமாக தற்போது ஜம்மு காஷ்மீருக்கு
சிறப்பு உரிமைகளை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370 பிரிவை நீக்குவதாக மத்திய
அரசு அறிவித்துள்ளது. இதனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அதிகாரம்
ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக மத்திய பாஜக அரசு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, ஜம்மு காஷ்மீர், லடாக் என்று இராண்டாக பிரிப்பதாக
அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் இந்த அறிவிப்பை
வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன்
பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் இருக்கும். அதேபோல் சட்டப்பேரவை இல்லாத யூனியன்
பிரதேசமாக லடாக் செயல்படும்.

Very good decision.
பதிலளிநீக்குகாஷ்மீர் மக்கள் உணர்வுகளுக்கு ஜனநாயகத்திர்கு எதிரான செயல்
பதிலளிநீக்குIt is the duty of the govt. to keep all indians as equal in all respects. The benefits enjoyed by Kashmir people should have been extended to rest of India. Removing/taking away the benefits/rights of existing benefits from the kashmiris will keep them unrest in minds and this disturbance will last for long in their minds.
பதிலளிநீக்கு