Breaking News

தொடர் பதற்றம்.. வீட்டுக்காவலில்  உமர் அப்துல்லா, மெகபூபா, காஷ்மீரில் 144 தடை உத்தரவு...  ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிப்பு.. காஷ்மீரில் என்னதான் நடக்கிறது?

அட்மின் மீடியா
2
தொடர் பதற்றம்.. வீட்டுக்காவலில்  உமர் அப்துல்லா, மெகபூபா, காஷ்மீரில் 144 தடை உத்தரவு...  ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் குவிப்பு.. காஷ்மீரில் என்னதான் நடக்கிறது?



ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, மற்றும் மக்கள் தேசிய கட்சி தலைவர் மெகபூபா முப்தி ஆகியோர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகிறது.


ஜம்மு- காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனி லிங்க தரிசனத்துக்கு செல்லும் வழியில் அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் கண்ணிவெடிகள் அண்மையில் இந்திய ராணுவத்தினர் கண்டுபிடித்தனர்.


மாநிலத்தில் முக்கிய
இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்ட மிட்டு உள்ளதாக மத்திய அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.


இதனையடுத்து அமர்நாத்யாத்திரை சென்றவர்கள் அவசரமாக மாநிலத்தை விட்டுவெளியேற அரசு உத்தரவிட்டது


மேலும் சுற்றுலா பயணிகளை சொந்த ஊர்களுக்கு திரும்பி அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதைத் தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் காஷ்மீருக்கு ஆயிரக்கணக்கிலான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இணைய தள சேவைகளும் முடக்கி வைக்கப் பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லுாரிகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தலைநகர் ஸ்ரீநகரில் பேரணி மற்றும் பொதுகூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இதனால் காஷ்மீரில் என்னதான் நடக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.


காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்வதற்காகவே இந்த ராணுவ படைகள் குவிப்பு என்று பேசப்பட்டது. 

அதேசமயம் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோர் ஆளுநர் சத்யபால் சிங்கை சந்தித்து பேசினர்.


அப்போது பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவே காஷ்மீரில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுதான் காரணம் வேறு ஏதுவும் இல்லை , என ஆளுநர்
கூறினார்
 
மேலும் அடுத்து என்ன நடக்கும் என்ற ஒர் பதட்டத்தில் தான் காஷ்மீர் மக்கள் இருக்கின்றார்கள் என்பது உண்மை

Give Us Your Feedback

2 Comments

  1. ஆனால் ஊடகங்கள் தரும் செய்திகளை பார்க்கும் பொது தான் பயமாக இருக்கிறது உங்கல் செய்திகலை பார்க்கும் பொது மனம் கொஞ்சம் நிம்மதி அடைகிறது.
    இறைவா காஸ்மீர் மக்களுக்கு நிம்மதியான வாழ்வை கொடு...ஆமீன்

    பதிலளிநீக்கு