சவுதி அரேபியாவில் சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டதா ?
அட்மின் மீடியா
0
சவுதி அரேபியாவில் சிவன் கோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஓர் செய்தியினை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
மேலே உள்ள செய்தி இந்தோனேசியாவின் ஜாவா பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு நடந்தது
அந்த பகுதியில் உள்ள இஸ்லாமிய பல்கலைக் கழகம் ஒன்று புதிய கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியுள்ளது.
அப்போது, வித்தியாசமான முறையில் கல் தட்டுப்படவே, இது குறித்து அகழ்வாராய்ச்சி துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்து ஆய்வு செய்து இரண்டு சிறிய கோவில்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த கோவில் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்து கோவில் என்றும் கட்டிடம் கட்டப்பட்ட விதத்தை வைத்து அவை
1100 பழமையானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி