பஸ் வேலை நிறுத்தத்தால் மக்கள் கடும் அவதி
அட்மின் மீடியா
0
போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால்,
சென்னையில் பெரும்பாலான மாநகர பேருந்துகள் ஓடவில்லை.
போராட்டம் காரணமாக மிக குறைவான எண்ணிக்கையில் தான் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் ஏன்
ஜூன் மாத சம்பளம் முழுமையாக வழங்காததை கண்டித்து, போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர்.
ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் திடீர் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, சென்னையில் பெரும்பான்மையான மாநகர பேருந்துகள் ஓடவில்லை.
இந்த திடீர் வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக சுமார் 2000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல், பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன
இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை என்பதால், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்வோரும் போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் கடும் அவதியடைந்துள்ளனர்.