மசூதிகளில் பெண்கள் அனுமதிக்க கோரிய மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி
மசூதிகளில்பெண்களை அனுமதிக்க கோரிய மனு:
கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மசூதிகளில் முஸ்லிம் பெண்களை அனுமதிக்கக் கோரிய மனுவை கேரள உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அகில இந்திய ஹிந்து மகா சபையின் கேரள மாநிலத் தலைவர் தேத்தாத்ரேய சாய் ஸ்வரூப் நாத், இதுதொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார்.
அவர் தனது மனுவில்
பெண்களை வயது பாகுபாடின்றி ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அதேபோன்று மசூதிகளில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மசூதிக்குள் நுழையவும், தொழுகை நடத்தவும் பெண்களுக்கு அனுமதி இல்லை என்பது சட்டத்தின் முன் அனைவரும் சமம், தனிநபர் சுதந்திர பாதுகாப்பு ஆகியவை தொடர்பான அரசமைப்புச் சட்ட விதிகள் 14 மற்றும் 21-ஐ மீறுவதாகும்.
முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவில் கூட பெண்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
முஸ்லிம் பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
அதே சமயம், சமூக விரோதிகளும் அந்த உடையை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
அம்மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஏ.கே.ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, பெண்களை மசூதிகளில் அனுமதிப்பதில்லை என்ற முடிவால் பாதிக்கப்பட்ட நபராக மனுதாரர் இல்லை.
அவரது உரிமைகளும் பாதிக்கப்படவில்லை. ஆகவே, மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Alhamdulillah true always win
பதிலளிநீக்குAlhamdulillah true always win
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்கு