தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் எவ்வளவு. மாவட்டவாரியாக எந்த எந்த பள்ளியில் எவ்வளவு கட்டணம் என ஆன்லைனில் வெளியீடு
அட்மின் மீடியா
0
அனைத்து தனியார் பள்ளிகளும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் தாங்கள் வசூலிக்கும் கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாகப் பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் கட்டாயம் வெளியிட வேண்டும் என தமிழக அரசு மற்றும் மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளன.
இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "கல்விக் கட்டணம் ஒன்றும் கருப்புப் பணம் அல்ல" என்று கூறி கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்ற உத்தரவை உறுதி செய்துள்ளது
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் நடப்பு 2026-27ஆம் கல்வியாண்டில் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரங்கள், ‘tnfeecommittee.com’ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாவட்ட வாரியாகப் பொதுமக்களின் பார்வைக்காக தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
பெற்றோர்கள் தங்கள் பகுதியிலுள்ள பள்ளிகளின் முறையான கட்டண விவரங்களை எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், கடந்த 2025-26ஆம் கல்வியாண்டில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் வசூலித்த கட்டண விவரங்களும் இதில் முழுமையாகப் பதிவேற்றப்பட்டுள்ளன.
Tags: அரசியல் தமிழக செய்திகள்