Breaking News

வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு 19 கிலோ சிலிண்டர் விலை உயர்வு! Price of 19 kg cylinder of cooking gas for commercial use increased!

அட்மின் மீடியா
0

 வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.42 உயர்த்தப்பட்டுள்ளது Price of 19 kg cylinder of cooking gas for commercial use increased!



சென்னையில் 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.45.50 உயர்ந்து ரூ.3,283 ஆக விற்பனை வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.928.50-க்கு நீடிக்கிறது

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய செலாவணி விகிதத்தில் ஏற்படும் மாற்றத்தின் அடிப்படையில் மாதந்தோறும் காஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, கடந்த இரு மாதங்களாக வணிக சிலிண்டரில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. போர் துவங்கியது முதல் காஸ் சிலிண்டர் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் கடந்த மார்ச் மாதம் 144 ரூபாயும், ஏப்ரல் மாதம் 203 ரூபாயும், மே 1ம் தேதி 993 ரூபாயும் அதிகரித்தது.

இந்நிலையில், இன்றும் (ஜூன் 01) வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை உயர்வை சந்தித்துள்ளது. 

19 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்து ரூ.3,283க்கு விற்பனை செய்யப்படுகிறது.வணிக சிலிண்டர் விலை கணிசமாக உயர்த்தப்பட்ட போதிலும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback