அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விபரங்களை பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் வெளியிட வேண்டும் -மாநில தகவல் ஆணையம் உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விபரங்களை, பள்ளிகளின் விளம்பரப் பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து, இந்தாண்டு 1 முதல் 3ம் வகுப்பு வரையிலும், 4 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 1 ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை ஏற்கனவே அறிவித்து இருந்தது.
இதனிடையே, நிர்வாக வசதிக்காகவும், வெவ்வேறு வகுப்புகளில் குழந்தைகள் படிப்பதால் பெற்றோர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால், ஒரே தேதியில் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர், குடிநீர் வசதி, தூய்மைப்பணி, போக்குவரத்து ஏற்பாடு ஆகியவற்றை தமிழக அரசு ஆய்வு செய்தது. அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்த பிறகு, அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் ஜூன் 4ம் தேதி திறக்க வேண்டும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
இந்நிலையில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் விளம்பரப்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
