Breaking News

ஹார்மூஸ் நீரிணையை முழுமையாக மூடுவதாக ஈரான் அறிவிப்பு Iran announces complete closure of the Strait of Hormuz

அட்மின் மீடியா
0

 ஈரான் மீது அமெரிக்கா நேற்று நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. Iran announces complete closure of the Strait of Hormuz



மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் அல்லது ராணுவத்தை பயன்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித அமைதி உடன்படிக்கையையும் எட்ட முடியாது என ஈரானின் ஐ.நா தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை முழுமையாக மூடப்படுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. 

மேலும் ஹார்முஸ் நீரிணையை சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற 2 வணிகக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. 

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் பின்னடைவைச் சந்தித்த நிலையில், ஹார்முஸ் நீரிணை(Strait of Hormuz) வழியாகச் செல்லும் எந்தவொரு கப்பலையும் குறிவைத்துத் வைத்துத் தாக்கவிருப்பதாக ஈரானிய ராணுவம்  தெரிவித்தது.

குவைத், பஹ்ரேனில் உள்ள விமானப் படைத்தளங்களில் உள்ள 18 அமெரிக்க ராணுவ வசதிகள் மீது தாங்கள் பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானிய ராணுவம் தெரிவித்துள்ளது,

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback