தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை 37 லட்சம் பணம் பறிமுதல்- 3 பேர் சஸ்பெண்ட்
தமிழகத்தில் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.37.75 லட்சம் பறிமுதல்
தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில் 3 சார் பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பத்திரபதிவுக்கு வரும் பொதுமக்களிடம் ஏக்கர் மற்றும் கட்டுமானத்துக்கு தகுந்தாற்போல் ஆயிரம் மற்றும் லட்சகணக்கில் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், சென்னையில் 4 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை நடத்தியது.
இதன் முடிவில் திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பிற்பகல் 2.30 மணி முதல் 350க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதால் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனையில் 37 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. சேலம் கிழக்கில் 3 லட்சமும், விருகம்பாக்கம், ஓட்டப்பிடாரம் அலுவலகத்தில் 2 லட்சமும், கொன்னூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் 84,000 செம்பியம் அலுவலகத்தில் 1.48 லட்சம், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
