PM ஜன் தன் திட்டத்தில் ரூ.2 லட்சம் கிடைக்கும் என பரவும் செய்தி உண்மை என்ன What is the truth behind the news that you will get Rs 2 lakh under the PM Jan Dhan Yojana?
அட்மின் மீடியா
0
PM ஜன் தன் திட்டத்தில் ரூ.2 லட்சம் கிடைக்கும் என பரவும் செய்தி உண்மை என்ன What is the truth behind the news that you will get Rs 2 lakh under the PM Jan Dhan Yojana?
சமூகவலைதளங்களில் பரவும் செய்தி:-
உண்மை என்ன:-
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டம்:-
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்ட கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நேரடிப் பணம் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால், கணக்குடன் வழங்கப்படும் RuPay டெபிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.2 லட்சம் வரையிலான விபத்து காப்பீடு மற்றும் ரூ.10,000 வரையிலான ஓவர் டிராஃப்ட் (Overdraft) வசதி பெறலாம்.
அதாவது புதிய RuPay கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 2 இலட்சம் வரையான இலவச விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.
தகுதியான பயனாளிகள் தங்கள் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும், ரூ. 10,000 வரை கூடுதலாக எடுக்கலாம்.சேமிப்புக் கணக்கு: குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) தேவையின்றி பூஜ்ஜிய இருப்பில் கணக்கைத் தொடங்கலாம்.
காப்பீட்டுத் தொகையைப் பெற, விபத்து ஏற்படுவதற்கு முந்தைய 90 நாட்களுக்குள் உங்கள் RuPay கார்டு மூலம் ஏதேனும் ஒரு பரிவர்த்தனை (டெபாசிட், பணம் எடுத்தல், பில் செலுத்துதல் போன்றவை) செய்திருக்க வேண்டும்.
வதந்தி:-
பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) திட்டத்தின் கீழ் 13-65 வயதுடைய இந்தியர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை நேரடி நிதியுதவி வழங்கப்படுவதாக பரவும் தகவல் தவறானது.
PMJDY திட்டத்தில் பயனாளிகளுக்கு வயது அடிப்படையில் ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை நேரடி நிதியுதவி வழங்கப்படுவதில்லை.
PMJDY கணக்குதாரர்களுக்கு ரூபே (RuPay) டெபிட் கார்டு மூலம் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை இலவச விபத்து காப்பீட்டு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் அரக அல்லாத இணையதள இணைப்புகளை நம்பி தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB)
Tags: மறுப்பு செய்தி


