Breaking News

பிரபல யூடியூபர் மாரிதாஸ் கைது...YouTuber Maridhas arrested...

அட்மின் மீடியா
0
அவதூறு மாரிதாஸ் அதிரடி கைது – சென்னை அழைத்து வரப்படுகிறார்!
சமூக ஊடகங்களில் பதிவிட்ட கருத்துகள் தொடர்பாக பல புகார்கள்
சட்டம் & ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு

பிரபல யூடியூபர் மாரிதாஸ், வலது சாரி சிந்தனை கொண்டவர், பல்வேறு வீடியோக்கள் மூலம் கடந்த திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தார்.  அப்போது கைது செய்யப்பட்ட மாரிதாஸ் ஜாமினில் வெளியே வந்தார். 

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் புதிதாக தவெக அரசு பதவியேற்றுள்ளது. 

இதனையடுத்து, தனது யூடியூப் சேனல் மூலம்  தவெக அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வந்தார். 

இந்த நிலையில், இன்று காலை மதுரையில் உள்ள மாரிதாஸ் வீட்டிற்கு சென்ற சென்னை சைபர் கிரைம் போலீசார் மாரிதாஸிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட மாரிதாஸை அடுத்தக்கட்ட விசாரணைக்காக சென்னைக்கு சைபர் கிரைம் போலீஸார் அழைத்து வருகின்றனர்

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback