Breaking News

ஆட்சி அமைக்க விஜய்யை கவர்னர் அழைக்காதது ஏன்? முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஆட்சி அமைக்க விஜய்யை கவர்னர் அழைக்காதது ஏன்? முழு விவரம்




தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. .தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனை தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்து தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்காக உரிமை கோரினார்.

ஆனால் இதுவரை விஜய்யை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை. 

பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தது 118 எம்.எல்.ஏ.க்களை தன்வசம் வைத்திருக்க வேண்டும். த.வெ.க. 108 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் சேர்த்து, த.வெ.க.வின் கைவசம் 113 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனினும், திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்வார். அப்போது த.வெ.க.வின் பலம் 112 ஆக இருக்கும்.

இதனால், அக்கட்சி ஆட்சியமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆட்சியமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் வரும்படி கவர்னர் அறிவுறுத்தியுள்ளார் என கூறப்படுகிறது. 

மேலும் திமுகவும் , அதிமுகவும் த.வெ.க.வுக்கு ஆதரவு கிடையாது என்று தெரிவித்து விட்டது. இதனால், தமிழக அரசியலில் பரபரப்பு நீடித்து வருகிறது.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback