Breaking News

ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் உள்பட 9 பேர் பலி - படகு கவிழும் முன் எடுக்கப்பட்ட வீடியோ

அட்மின் மீடியா
0

ஜபல்பூர் படகு விபத்து 5 தமிழர்கள் உள்பட 9 பேர் பலி - படகு கவிழும் முன் எடுக்கப்பட்ட வீடியோ 



மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 5 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகி உள்ளது

மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்​டத்​தில் நர்மதை ஆற்​றின் குறுக்கே பார்கி அணை கட்​டப்​பட்​டுள்​ளது. இந்த அணை​யில் சுற்​றுலா பயணி​களுக்​காக படகு சவாரி இயக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் நேற்று முன்தினம் மாலை சுமார் 30 பயணிகள் பயணம் செய்தனர். அப்போது திடீரென காற்று பலமாக வீசியதால், படகு நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீருக்குள் மூழ்க தொடங்கினர். 

ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவை இணைந்து படகு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் கயிறு மூலம் நீரில் தத்தளித்தவர்களை மீட்டனர். 


இந்த விபத்தில் திருச்சியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்

திருச்சி நவல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் காமராஜ்(39).இவர் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் அருகே கமேரியாவில் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலையில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். 

இவரது மனைவி கார்குழலி. இவர்களது மகன்கள் புவிதரன்(10), தமிழ்வேந்தன்(6).சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் தாராபுரத்தில் வசிக்கும் கார்குழலியின் அண்ணன் பரிமேலழகன், தனது மனைவி சவுபாக்கியம், மகன் மயூரன், மகள் இனியா(12) உடன் ஜபல்பூர் சென்றிருந்தார். 

அவர்களை பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவாக காமராஜ் அழைத்து சென்றுள்ளார். ஏப்.30-ம் தேதி மாலை 4 மணி அளவில் பார்கி அணைக்கு படகு சவாரி சென்றபோதுதான் அனைவரும் விபத்தில் சிக்கியுள்ளனர்.

இந்த விபத்தில் காமராஜ், அவரது மனைவி கார்குழலி, இளைய மகன் தமிழ்வேந்தன், சவுபாக்கியம், அவரது மகன் மயூரன் உட்பட 9 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காமராஜின் மூத்த மகன் புவிதரன், உறவினர் இனியா ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். 

இதனிடையே உயிரிழந்தவர்களில் ஒரு தாயும் அவரது நான்கு வயது மகனும் அடங்குவர். இன்று காலை அவர்களது உடல்கள் மீட்கப்பட்டது. குழந்தையைக் காப்பாற்றும் தீவிர முயற்சியில் தாய் மகனை மார்போடு அணைத்தபடி மீட்கப்பட்டது பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. 

படகு கவிழும் முன் எடுக்கப்பட்ட வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://x.com/upuknews1/status/2050187837916717101

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback