Breaking News

சட்டசபை தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிந்து கொள்ள உங்கள் மொபைல் போனில் உடனுக்குடன் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

 சட்டசபை தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிந்து கொள்ள புதிய இணையதளம்!



தமிழகம், புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்து, வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. அன்று காலை 8:00 மணிக்கு, ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது.

அன்றைய தினம் காலை 8 மணி முதல் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக உடனுக்குடன் தேர்தல் முடிவுகளை மக்கள் தெரிந்துகொள்ளலாம். 

பொதுமக்கள் தங்களின் கைபேசி வாயிலாகவும் தேர்தல் நிலவரங்களை அறியும் வகையில் 'Voter Helpline' மற்றும் 'ECINET' ஆகிய சிறப்பு செயலிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பின் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். தேர்தல் முடிவுகள் தொடர்பான விபரங்கள், முன்பு தேர்தல் கமிஷன் இணையதளத்தில் மட்டும் வெளியானது. 

இம்முறை, தேர்தல் கமிஷனின் 'ECINET' என்ற மொபைல் செயலி யிலும், முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. மாநில வாரியாக, தொகுதிகள் வாரியாக, உடனுக்குடன் முன்னணி நிலவரங்கள் வெளியிடப்பட உள்ளன. 

இந்த செயலிகள் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ள வேட்பாளர்கள் மற்றும் வாக்கு வித்தியாசங்களை நொடிக்கு நொடி துல்லியமாக அறிந்துகொள்ள முடியும். 

தொழில்நுட்ப வசதிகள் மூலம் தேர்தல் முடிவுகளை வெளிப்படையான முறையில் வழங்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு சுற்று முடிவிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முறையாக வெளியிடப்படும். தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.



Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback